காவிரி விவகாரம் குறித்து திமுக சார்பில் வரும் 25 ஆம் தேதி அனைத்துக்கட்சிக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

205

காவிரி விவகாரம் குறித்து திமுக சார்பில் வரும் 25 ஆம் தேதி அனைத்துக்கட்சிக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காவிரி விவகாரம் குறித்து அனைத்துக்கட்சிக்கூட்டத்தை கூட்டி விவாதிக்கவேண்டும் என தமிழக அரசுக்கு திமுக கோரிக்கை விடுத்தது. ஆனால் இது குறித்து தமிழக அரசு சார்பில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்நிலையில், காவிரி பிரச்சனை குறித்து அனைத்துக்கட்சிக்கூட்டத்துக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக அனைத்துக் கட்சிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஸ்டாலின் அழைப்புக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், வரும் 25 ஆம் தேதி நடைபெறும் அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் கலந்து கொள்ளவருமாறு கூறப்பட்டுள்ளது.