காவிரியில் கர்நாடகம் கட்டும் அணையை மத்திய அரசு தடுத்து நிறுத்தா விட்டால் நெய்வேலி மற்றும் கூடங்குளத்தில் இருந்து மின்சாரம் அளிப்பதை தடுக்க போவதாக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

296

காவிரியில் கர்நாடகம் கட்டும் அணையை மத்திய அரசு தடுத்து நிறுத்தா விட்டால் நெய்வேலி மற்றும் கூடங்குளத்தில் இருந்து மின்சாரம் அளிப்பதை தடுக்க போவதாக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
தஞ்சையில் தமிழக விவசாயிகள் சங்க துணை தலைவர் சுகுமாறன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். காவிரி டெல்டா மாவட்டங்களில் 5 ஆண்டுகளாக குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகி உள்ளதாக தெரிவித்தார். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டப்போவதாக அறிவித்து இருப்பது, டெல்டா விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக சுகுமாறன் கூறினார். கர்நாடக அரசின் இந்த செயல்களை மத்திய அரசு தடுத்துநிறுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.