காவிரி விவகாரத்தில் பா.ஜ.க. மீது குற்றம் சுமத்துவது ஏற்புடையதல்ல என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

209

காவிரி விவகாரத்தில் பா.ஜ.க. மீது குற்றம் சுமத்துவது ஏற்புடையதல்ல என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபேட்டை 118வது வார்டு பகுதியில், தமிழிசை செளந்தரராஜன் தூய்மை திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி கொண்டுவந்துள்ள தூய்மை இந்திய திட்டம், நாடு முழுவதும் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். அதன்படி இப்பகுதியில் தூய்மை திட்டத்தை தொடங்கி வைத்துள்ளதாகவும், பாஜக தொண்டர்கள் இந்த பணியை தொடர்ந்து செய்து வருவார்கள் என்று அவர் கூறினார்.

மேலும், செங்கல்பட்டில் 330 ஏக்கர் நிலப்பரப்பில் மருத்துவ பூங்கா அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். காவிரி விவகாரத்தில் பா.ஜ.க ஒருபோதும் தமிழகத்தை வஞ்சிக்காது என்று கூறிய தமிழிசை, பா.ஜ.க. மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது கண்டிக்கதக்கது என்றும் கூறினார்.