காவிரி உள்ளிட்ட நதிநீர் பிரச்சனைகளில் தீர்வு காணும் வகையில், தமிழக முதலமைச்சர் அண்டை மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளர்.

253

காவிரி உள்ளிட்ட நதிநீர் பிரச்சனைகளில் தீர்வு காணும் வகையில், தமிழக முதலமைச்சர் அண்டை மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளர்.

சென்னையில் நடைபெற்ற குழந்தைகளுக்கான ஓவியக் கண்காட்சியில் பங்கேற்ற தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், பரவி வரும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க ஆரம்ப சுகாதாரநிலையங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நோய் தொற்று பரவாத வண்ணம் கண்காணிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார். அத்துடன் காவிரி உள்ளிட்ட நதிநீர் பிரச்சனைகளில் தீர்வு காணும் வகையில், தமிழக முதலமைச்சர் அண்டை மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்