காவிரி நதிநீர் பிரச்னையில் பிரதமர் மோடியும், சோனியா காந்தியும் தலையிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.

168

காவிரி நதிநீர் பிரச்னையில் பிரதமர் மோடியும், சோனியா காந்தியும் தலையிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை மனிதாபிமானத்தோடு அணுகவேண்டும் என்றும், இரு மாநிலங்களுக்கிடையே நல்ல சூழல் நிலவ வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய நீர் வளத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தததை குறிப்பிட்டுள்ள அவர்,

நீதிமன்றத்தின் உத்தரவை கர்நாடக அரசு அமல்படுத்தாமல் இருப்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தாத கர்நாடக அரசு நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உட்பட வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவித்துள்ள அவர்,

காவிரி விவகாரத்தில், நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை கர்நாடக அரசு சிறிதும் எண்ணிப் பார்க்காமல் தொடர்ந்து மீறி வருவதாக கருணாநிதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மத்திய அமைச்சர்கள் தமிழகத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருப்பதும், முன்னாள் பிரதமர் தேவகவுடா உண்ணாவிரதம் மேற்கொள்ளும் நிலைக்குச் சென்றிருப்பதும் கெட்ட வாய்ப்பு என கூறியுள்ள அவர்,

கொதி நிலையை அடைந்து விட்ட இந்தப் பிரச்னையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த பிரச்சனையில் பிரதமர் மோடி மற்றும் சோனியா காந்தி ஆகிய இருவரும் உடனடியாக தலையிட்டு, கர்நாடக அரசை நல்வழிப்படுத்திட உடனடியாக முன்வரவேண்டும் என்றும் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.