காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினி கருத்து | ஆத்திரமடைந்த கன்னட அமைப்புகள் ..!

586

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்ததால், கர்நாடகாவில் அவருக்கு எதிராக போராட்டங்கள் வலுத்துள்ளன.
காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக, தமிழக விவசாயிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் அதிருப்தியும் எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர். உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த்தும் கருத்து தெரிவித்திருந்தார்.
கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட ரஜினிகாந்த், காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பதற்கு கன்னட அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ரஜினியின் உருவப் பொம்மையை எரித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவின் பல பகுதிகளில் ரஜினிக்கு எதிராக போராட்டங்கள் வலுத்துள்ளன.