காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டுள்ளதை கண்டித்து கர்நாடகாவில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.

270

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டுள்ளதை கண்டித்து கர்நாடகாவில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.
காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட சலுவாளி கட்சி சார்பில் பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது, பேசிய வாட்டாள் நாகராஜ், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டுள்ளதை கண்டித்து கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவித்தார். தாங்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருவதாக கூறிய அவர், பெங்களூருவில் நடைபெற்ற வன்முறைக்கும், தங்கள் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார். தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்து விடுவதை நிறுத்தும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று வாட்டாள் நாகராஜ் உறுதிப்பட தெரிவித்தார்.