காவிரி பிரச்னையால் எழுந்த போராட்டங்கள் முடிந்து அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் இன்று போராட்டங்களை தீவிரப்படுத்த கன்னட அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

363

காவிரி பிரச்னையால் எழுந்த போராட்டங்கள் முடிந்து அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் இன்று போராட்டங்களை தீவிரப்படுத்த கன்னட அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை எதிர்த்து, கர்நாடகாவில் கன்னட செழுவழி அமைப்பினர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் இன்று பெங்களூரில் தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளனர். இதில் கன்னட வேதிகே, ஜெய் கன்னட அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் பங்கேற்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. மீண்டும் போராட்டம் தீவிரமடைவதால் இரு மாநில எல்லையிலும் துணை ராணுவத்தினர், போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கர்நாடகா பதிவெண் கொண்ட வாகனங்கள் அனைத்தும் தமிழகத்திற்குள் வர தடை விதிக்கப் பட்டுள்ளது. கிருஷ்ணகிரி டோல்கேட் மற்றும் ஓசூர் எல்லையில் போலீசார் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். அதேநேரத்தில் அத்திப்பள்ளி, ஓசூர் வழியாக வராமல் பாகலூர், வேப்பனஹள்ளி உள்ளிட்ட பிற சாலை வழியாக தமிழகத்திற்குள் வரக்கூடிய கர்நாடக பதிவெண் வாகனங்கள் கிருஷ்ணகிரி டோல்கேட்டில் தடுத்து நிறுத்தப்படுகின்றன. இன்று 13வது நாளாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் தமிழக-கர்நாடக மாநில மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.