காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசைக்கண்டித்து காவிரி டெல்டா மாவட்டத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

251

காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசைக்கண்டித்து காவிரி டெல்டா மாவட்டத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பின் படி தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடகம் நடப்பாண்டு திறக்கவில்லை. இதனால், தஞ்சை,திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் லட்ச்சணக்கான ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரின்றி வாடி வருகின்றனர். இந்நிலையில், காவிரியில் தண்ணீர் திறந்துவிடக்கோரி டெல்டா மாவட்டங்களில் முழுகடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் அனைத்துக்கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், திமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த திரளானோர் பங்கேற்றனர். அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும், காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடகாத்தை மத்திய அரசு கண்டிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.