காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் தஞ்சாவூரில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

294

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் தஞ்சாவூரில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
உச்சநீதிமன்ற உத்தரவை புறக்கணித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக விவசாயிகளுக்கு துரோகம் மத்திய பாஜக அரசை கண்டித்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தஞ்சாவூரில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் ரயிலடி தலைமை தபால்நிலையம் முன் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரத பேராட்டத்தில் திமுக தலைமை நிலைய செயலாளர் துரைமுருகன் மற்றும் டி.ஆர்.பாலு, பொன்முடி உள்பட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டுள்ளனர். மேலும், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளும் இந்த உண்ணா விரத போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.