காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

210

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்திற்கு வரவேண்டிய காவிரி நீர், கர்நாடக அணையிலிருந்து முறைப்படி திறக்கப்படவில்லை. குறிப்பாக மத்தியில் ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜக அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருவதாக தமிழக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் தமிழகத்தில் பருவ மழை பொய்ததாலும், நிலத்தடி நீர் குறைந்து போனதாலும், பல ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட பயிர்கள் கருகி நாசமாயின. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் பலர் தற்கொலை செய்து கொண்டனர்.
இந்தநிலையில், காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதியதாக அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவு செய்ய கர்நாடக அரசு விரிவான திட்ட அறிக்கை தயாரித்துள்ளது. மழை காலங்களில் கடலில் கலக்கும் உபரி நீரை பயன்படுத்தும் விதமாக இந்த அணை கட்டப்பட உள்ளதாகவும், இதிலிருந்து 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய உள்ளதாகவும் கர்நாடக அரசு கூறியுள்ளது. இதற்கு தமிழக அரசும், விவசாயிகளும் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.