காவிரியில் தண்ணீர் திறப்பைத் தள்ளி வைக்குமாறு கோரி, உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை கர்நாடக அரசு இன்று தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.

195

காவிரியில் தண்ணீர் திறப்பைத் தள்ளி வைக்குமாறு கோரி, உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை கர்நாடக அரசு இன்று தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.
கடந்த 21-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை தமிழ்நாட்டுக்கு 6,000 கன அடி காவிரி நீரைத் திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்தத் தீர்ப்பை ஏற்க கர்நாடக அரசு மறுத்துவிட்டது. இதனையடுத்து, கர்நாடக மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, கர்நாடகத்தில் பருவ மழை முடிவுக்கு வரும் நிலையில் உள்ளதால், அங்குள்ள நீர்த்தேக்கங்கள் நிரம்பும் வரை தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்து விடுவதை ஒத்திவைக்குமாறு கோரி, உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை இன்று தாக்கல் செய்ய கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.