காவிரி பிரச்சனைக்கு தீர்வுக்காண தமிழக, கர்நாடக மாநில முதலமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

298

காவிரி பிரச்சனைக்கு தீர்வுக்காண தமிழக, கர்நாடக மாநில முதலமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
காவிரியில் தமிழகத்துக்கு கடந்த 21ம் தேதி முதல் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதை ஏற்க மறுத்த கர்நாடக அரசு, சட்டசபையை கூட்டி தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தது. இதுதொடர்பாக மீண்டும் உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், கர்நாடகாவின் தீர்மானங்கள் உச்சநீதிமன்ற உத்தரவை கட்டுப்படுத்தாது என்று அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக, கர்நாடக அரசுகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இதனையடுத்து டெல்லியில் நாளை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில், தமிழக, கர்நாடக முதலமைச்சர்களுடன் உமாபாரதி ஆலோசனை நடத்த உள்ளார். நீர்வளத்துறை அமைச்சர், பொதுப்பணித்துறை செயலாளர்களுக்கும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.