காவிரி டெல்டா விவசாயிகளுக்கு 54 கோடியே 65 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளதாக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.

319

காவிரி டெல்டா விவசாயிகளுக்கு 54 கோடியே 65 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளதாக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் தஞ்சை, கும்பகோணம், கபிஸ்தலம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கசாமி, ராமநாதன், ராம்குமார் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைக்கண்ணு, தமிழக அரசின் புதிய பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயிர் பாதிப்புகளுக்கு நிதி வழங்க 454 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் நலன் கருதி 54 கோடியே 65 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.விவசாயிகளின் நலனில் முதலமைச்சர் ஜெயலலிதா உரிய கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்தார்.