காவிரி பிரச்சனையில் இரு மாநிலங்களின் நிலை குறித்து உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்ய வேண்டும் என்று கர்நாடக மேலவை எதிர்கட்சித் தலைவர் ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.

302

காவிரி பிரச்சனையில் இரு மாநிலங்களின் நிலை குறித்து உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்ய வேண்டும் என்று கர்நாடக மேலவை எதிர்கட்சித் தலைவர் ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடக மேலவை எதிர்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமாக ஈஸ்வரப்பா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகாவில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறிய அவர், கர்நாடகாவின் உண்மை நிலை தெரியாமல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்தார்.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு தமிழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பமில்லை என தெரிவித்த அவர், இரு மாநிலங்களின் உண்மை நிலையை கண்டறிய குழு அமைத்து ஆய்வு செய்யவேண்டும் எனவும் தெரிவித்தார்.