காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வாய்ப்பில்லை என்று கர்நாடக அமைச்சர் எம்.பி பாட்டீல் தெரிவித்துள்ளார்.

320

காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வாய்ப்பில்லை என்று கர்நாடக அமைச்சர் எம்.பி பாட்டீல் தெரிவித்துள்ளார்.
காவிரியிலிருந்து ஆண்டு தோறும் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடகம் வழங்காததால், உச்ச நீதிமன்றத்தை தமிழகம் நாடி உள்ளது. இதனால், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை போக்க, கர்நாடகம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு கோரியுள்ளது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதபு பற்றி கர்நாடக அரசின் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் எம்.எம். பாட்டீல் இதற்கு தலைமை வகித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கர்நாடகாவில் போதிய அளவு மழை பெய்யாததால், தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கும் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டவில்லை என்று தெரிவித்தார். தற்போது அணைகளில் உள்ள தண்ணீர் குடிநீர் தேவைக்கு மட்டுமே போதுமானதாக உள்ளதாக அவர் கூறினார். எனவே, அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததால் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்த எம்.எம். பாட்டீல், இது பற்றி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்செய்யப்படும் என்று கூறினார்.