காவிரி ஆற்றின் குறுக்கே தமிழக அரசு அறிவித்த தடுப்பணையை போர்க்கால அடிப்படையில் கட்டித்தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

407

காவிரி ஆற்றின் குறுக்கே தமிழக அரசு அறிவித்த தடுப்பணையை போர்க்கால அடிப்படையில் கட்டித்தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அருணா தலைமையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது கரூர் மாவட்டம் லாலாபேட்டை பகுதியில் காவேரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டதையடுத்து பொதுப்பணித்துறையினர், அதற்கான நடவடிக்கைகளை எடுத்தாகவும், சட்டமன்ற தேர்தல் வந்ததையடுத்து பணிகள் நிறுத்திவைக்கப்பட்டதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். இவற்றை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் முழு முயற்சியில் ஈடுபடவேண்டும் எனவும் விவசாயிகள் கேட்டுக்கொண்டனர். மேலும் தடுப்பணை கட்டப்படுவதால் தென் மாவட்டங்களில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் எடுத்துச்செல்ல வசதியாக இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.