கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடம் – காவேரி மருத்துவமனை நிர்வாகம்…

421

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கருணாநிதியின் முக்கிய உறுப்புகளை சீராக செயல்பட வைப்பதில் சவால் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும்,கருணாநிதிக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.கருணாநிதியின் உடல்நிலை முன்னேற்றம் குறித்து 24 மணி நேரத்திற்கு பின்னரே சொல்ல முடியும் எனவும் காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.