கத்தார் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 3 பேர் மேல்முறையீடு செய்ய ஒன்பதரை லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

267

கத்தார் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 3 பேர் மேல்முறையீடு செய்ய ஒன்பதரை லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கத்தார் நீதிமன்றத்தால், அங்கு பெண்மணியை கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், புதுக்கோட்டை அழகப்பா சுப்பிரமணி, விருதுநகர் செல்லத்துரை பெருமாள் மற்றும் சேலம் சிவக்குமார் அரசுன் ஆகியோருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரணதண்டனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு்ள்ளது.
இதனையடுத்து, கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததன் அடிப்படையில், அழகப்பா சுப்பிரமணி, செல்லதுரை பெருமாள் ஆகியோருக்கான மரணதண்டனையை உறுதி செய்தும், சிவக்குமார் அரசனுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றியும் உத்தரவிடப்பட்டதாக அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் கத்தார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஒன்பதரை லட்ச ரூபாய் ஆகும் என இந்திய தூதரகம் தமிழக அரசுக்கு தெரிவித்து, அனுப்பும்படி கேட்டுக்கொண்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதலமைச்சர் நிதியுதவி:

பெண் கொலை வழக்கில், புதுக்கோட்டை அழகப்பா சுப்பிரமணி, விருதுநகர் செல்லத்துரை பெருமாள் மற்றும் சேலம் சிவக்குமார் அரசன் ஆகியோருக்கு கத்தார் நீதிமன்றம் மரணதண்டனை
இந்திய தூதரகம் சார்பில் கத்தார் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில், மூவரில் ஒருவருக்கு ஆயுள்தண்டனையாக மாற்றி உத்தரவு
இந்த வழக்கில், கத்தார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஒன்பதரை லட்ச ரூபாய் செலவாகும்
தேவையான சட்ட உதவிகளை பெற, உதவி செய்ய வேண்டுமென தண்டனை விதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முதலமைச்சருக்கு கோரிக்கை
தண்டனை விதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மேல்முறையீடு செய்ய ஒன்பதரை லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கிட உத்தரவு
தண்டனை பெற்ற தமிழர்கள் முறையாக மேல்முறையீடு செய்வதை உறுதி செய்யும்படி அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு

இதனிடையே, இந்த விவகாரத்தில் தேவையான சட்ட உதவிகளை பெற, உதவி செய்ய வேண்டுமென தண்டனை விதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா, தண்டனை விதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கத்தார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஒன்பதரை லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தண்டனை பெற்ற தமிழர்கள் கத்தார் உச்சநீதிமன்றத்தில் முறையாக மேல்முறையீடு செய்வதை உறுதி செய்யும்படியும் அரசு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.