கத்தாரில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

282

கத்தாரில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த அழகப்பா சுப்பிரமணியன், சிவக்குமார் சேலம், செல்லதுரை பெருமாள் ஆகிய மூவரும் கத்தார் நாட்டைச் சேர்ந்த மூதாட்டியைக் கொலை செய்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் 2012ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட அழகப்பா சுப்பிரமணியன், செல்லதுரை பெருமாள் ஆகிய இருவருக்கும் தூக்குத் தண்டனையை உறுதிப்படுத்திய கத்தார் நீதிமன்றம், சிவக்குமாருக்கு ஆயுள் தண்டனையாக தீர்ப்பளித்தது.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், கத்தாரில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று தமிழர்களைக் காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளார். அத்துடன் கத்தார் நீதிமன்றத்தில் தீர்ப்பின் நகலைப் பெற்று, கத்தார் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான பணிகளை இந்தியத் தூதரகம் ஈடுபட்டுள்ளதாகவும் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்தார்.