கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 11 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து டெல்டா மாவட்டங்களில் இன்று…

341

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 11 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து டெல்டா மாவட்டங்களில் இன்று வணிகர்கள் கடையடைத்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில், ஓஎன்ஜிசிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரியும் 11 நாட்களாக தொடர்ந்து முழுஅடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவித்து தஞ்சை, நாகை வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து., மயிலாடுதுறை வர்த்தகர்கள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளிலும் மாணவர்கள் வகுப்புக்களைப் புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.