கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 5 பேர் கைது | இலங்கை கடற்படை அடாவடி நடவடிக்கை …!

286

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
ராமேஸ்வரத்தை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்கச்சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் கற்களை வீசியும், கண்ணாடி பாட்டில்களை வீசியும் விரட்டியத்தனர். மேலும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக்கூறி வலைகளை அறுத்து எறிந்தும் அட்டூழியத்திலும் அவர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து, 5 மீனவர்களையும் அவர்களின் ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர். இதனால் உயிர் பிழைத்தால் போதும் என மற்ற மீனவர்கள் அவசர அவசரமாக கரைதிரும்பினர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் காங்கேசம் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களிடம் இலங்கை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.