கச்சத்தீவு அருகே மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி வலைகளை அறுத்தெறிந்துள்ள சம்பவம் மீனவ சமுதாய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

255

ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 670- க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது 4 ரோந்து படகுகளில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை சுற்றி வளைத்து கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், மீன்பிடி வலைகளை அறுத்தெறிந்து கடலில் வீசியதுடன் மீனவர்களை விரட்டியடித்துள்ளனர்.
இதனையடுத்து கடலில் மீன்பிடிக்க இயலாமல், வெறும் கையோடு கரை திரும்பியுள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறிய நடவடிக்கையால் தங்களுக்கு ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கரை திரும்பிய மீனவர்கள் வேதனை தெரிவித்தனர். இவ்விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண மத்திய மற்றும் மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.