இலங்கை கடற்படையினரால் கச்சதீவு அருகே சிறைப்பிடிக்கப்பட்ட 4 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

432

இலங்கை கடற்படையினரால் கச்சதீவு அருகே சிறைப்பிடிக்கப்பட்ட 4 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
கச்சதீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த 4 மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். மீனவர்களின் ஒரு விசைப்படகையும் கைப்பற்றினர். இலங்கை கடற்படையினரின் இந்த செயல் தமிழக மீனவ குடும்பத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட 4 மீனவர்களும் இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்ஜீன் கோளாறு காரணமாக காற்றின் வேகத்தால் திசை மாறியது என்று மீனவர்கள் கூறியதையடுத்து விடுவிக்கப்பட்டதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர்.