கச்சத்தீவு தேவாலய திறப்பு விழாவில் 100 தமிழர்கள் பங்கேற்க இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.

189

கச்சத்தீவு தேவாலய திறப்பு விழாவில் 100 தமிழர்கள் பங்கேற்க இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.
கச்சத்தீவில் உள்ள தேவாலய திறப்பு விழாவில் 20 தமிழர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அதிக தமிழர்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இலங்கை எம்.பி. ஆறுமுக தொண்டமானிடம் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும், கச்சத்தீவு விழாவில் 100 தமிழர்கள் கலந்து கொள்ள இலங்கை அதிபர் சிறிசேனா அனுமதி அளித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை தமிழக முதலமைச்சரிடம் வழங்க, இலங்கை ஊவா மாகாணத்தின் முதல்வர் செந்தில் தொண்டமான் சென்னை வந்துள்ளார். இது தொடர்பான மற்றொரு கடிதம் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனிடம் வழங்கப்பட உள்ளதாகவும் செந்தில் தொண்டைமான் தெரிவித்துள்ளார்.