கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் புதிய தாக்குதலாக தண்ணீரை பீ்ய்ச்சி அடித்து விரட்டியடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

236

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் புதிய தாக்குதலாக தண்ணீரை பீ்ய்ச்சி அடித்து விரட்டியடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரத்திலிருந்து 300 விசைப்படகுகளில் சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்துள்ளனர். இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் அச்சமடைந்த மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க முடியாமல் கரை திரும்பியுள்ளனர். காவிரியில் கர்நாடகம் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுப்பதை கேலி செய்யும் வகையில் இலங்கை படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்ததாக கரை திரும்பிய மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இதனால் படகு ஒன்றுக்கு முப்பதாயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறிய மீனவர்கள், அச்சமின்றி கடலில் மீன்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.