காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள் விவகாரம் என்பதால், அது குறித்து பாகிஸ்தானிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

248

காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள் விவகாரம் என்பதால், அது குறித்து பாகிஸ்தானிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தீவிரவாதி புர்கானி வானி கொல்லப்பட்டதை தொடர்ந்து, காஷ்மீரில் ஒருமாத காலத்திற்கும் மேலாக அசாதாரண சூழல் காணப்படுகிறது. இந்தநிலையில், காஷ்மீர் விவகாரத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் எழுப்ப பாகிஸ்தான் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக காஷ்மீர் பிரச்சினை பற்றி தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா முன்வர வேண்டும் என்று, பாகிஸ்தான் கோரியது. இதற்கு பதிலளித்துள்ள வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், இருநாட்டு நல்லுறவு தொடர்பாக மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயாராக இருப்பதாக கூறினார். எல்லை தாண்டிய தீவிரவாதம், இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்வது, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளை ஊக்குவிப்பது போன்ற செயல்களை பாகிஸ்தான் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று உறுதிபடத் தெரிவித்தார். எனவே, இதுபற்றி அண்டைநாடான பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இல்லை என்று விகாஸ் ஸ்வரூப் திட்டவட்டமாக கூறினார்.