புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கல் என தகவல்..!

474

காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, அப்பகுதியில் மத்திய ரிசர்வ் படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

காஷ்மீர் எல்லைப்பகுதியில், தீவிரவாதிகள் ஊடுருவலும், இந்திய முகாம்கள் மீதான பாகிஸ்தான் படைகளின் அத்துமீறிய தாக்குதல்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சோபியான் மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுடன் ராணுவத்தினர் நேற்று கடும் துப்பாக்கிச்சண்டையில் ஈடுபட்டனர், நேற்று முன் தினம், பண்டிப்போரா பகுதியில் ஊடுருவிய 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், புல்வாமா மாவட்டத்தில் உள்ள இமாம் சாஹிப் பகுதியில் தீவிரவாதிகள் மறைந்துள்ளதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, அப்பகுதியில், உள்ளுர் போலீஸார், மத்திய ரிசர்வ் படை மற்றும் ராணுவத்தினர் இணைந்து, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் வாழும் மக்களிடையே பெரும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.