இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி : பாதுகாப்புப் படையினர் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

240

காஷ்மீரில் இந்திய எல்லைப் பகுதிக்குள் ஊடுருவ முயன்ற இரண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹந்த்வாரா பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்தனர். அப்போது, மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்புப் படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர்.

இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில், இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, அந்தப் பகுதியில் வேறு தீவிரவாதிகள் யாராவது பதுங்கியுள்ளனரா? என ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.