காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற மூன்று தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

259

காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற மூன்று தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
ஜம்மு – காஷ்மீர் மாநிலம் சோபூரில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக
பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார், துணை ராணுவப் படையினர் மற்றும் ராணுவ வீரர்கள் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள், வீரர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தினர். ராணுவத்தினரும் இதற்கு பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என ராணுவத்தினர் தெரிவித்தனர்.மேலும், பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் காஷ்மீர் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.