காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் உள்பட 2 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர்!

0
138

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் உள்பட 2 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர்.
ஜம்மு – காஷ்மீர் மாநிலம் தெற்கே அமைந்துள்ள சோபியான் மாவட்டத்தில்
ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். பதிலுக்கு ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் இறந்தவர்களில் ஒருவர் தமிழக வீரர் என்பதும் அவர் சிவகங்கை மாவட்டம் கண்டனி பகுதியைச் சேர்ந்த இளையராஜா என்றும் தெரியவந்துள்ளது.
இதனிடையே துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் தற்போது நிலமை கட்டுக்குள் இருப்பதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY