காஷ்மீரில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் 2 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைந்து, இந்திய நிலைகள் மற்றும் ராணுவத்தினர் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், ஹந்த்வாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வீரர்கள், அவர்கள் மீது தாக்குதல் வேட்டையில் ஈடுபட்டனர். பதிலுக்கு தீவிரவாதிகளும் தாக்குதல் நடத்தியதால், இரு தரப்பிலும் துப்பாக்கி சண்டை கடுமையாக நடைபெற்றது. இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லபட்டனர். இந்திய தரப்பில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் காயமடைந்தார்.