காஷ்மீரில் மீண்டும் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

246

காஷ்மீரில் மீண்டும் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
கடந்த ஜூலை மாதம் பாதுகாப்புப் படையினரால் புர்ஹான் வானி என்ற தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து மாநிலம் முழுவதும் வன்முறை வெடித்தது. இதனால் அங்கு ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது அங்கு நிலைமை மேம்பட தொடங்கியதால் படிப்படியாக ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் போக்குவரத்து இன்னும் சீரடையவில்லை.பள்ளி மற்றம் கல்லூரிகள் தொடர்ந்து 55 வது நாளாக மூடியிருக்கின்றன.

இந்த நிலையில், பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபூரா நகருக்கு அருகே இளைஞர்கள் ஏராளமானோர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை தடுக்க வந்த பாதுகாப்பு படையினர் மீது அவர்கள் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 15 வயது சிறுவன் ஒருவன் பரிதாபாக உயிரிழந்தான்.மேலும் 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் காஷ்மீர் வன்முறைக்கு பலியானோரின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது.