தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயார்..!

148

காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பாதுகாப்பு படையினருக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் பேசிய அவர், காஷ்மீரில் ரம்ஜான் மாதத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை நிறுத்தியதற்கு முஸ்லீம் மக்களின் மீதான அன்பும், அக்கறையுமே காரணம் என்றார். இந்நிலையில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என்றும், தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பாதுகாப்பு படையினரை தயாராக உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார். இதனிடையே லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த 35 தீவிரவாதிகள் பூஞ்ச், ஜம்மு மற்றும் நவ்காம் பகுதிகளில் ஊடுருவத் தயாராக இருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.போர்நிறுத்தத்தை பயன்படுத்தி தீவிரவாதிகள் தங்களது பலத்தை பெருக்கி கொண்டதால், எல்லை முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.