ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும் நிலவி வரும் பனி மூட்டம் காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

143

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும் நிலவி வரும் பனி மூட்டம் காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும் பனிமூட்டத்தால், அனைத்து பகுதிகளிலும் பனிப்பொழிவு அடர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பூஞ்ச் மாவட்டத்தில் காங்கிரீஸ் எனப்படும் பாரம்பரிய தீ தொட்டிகளின் பயன்பாடு மக்களிடையே அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் காங்கிரீஸ் விற்பனை சூடு பிடித்துள்ளது.
மேலும், குல்காம் மாவட்டத்தில் உள்ள வால்டேங்கு நட் பகுதியில் பனியில் சிக்கிய 33 குழந்தைகள் உட்பட 80 பேரை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
அத்துடன், பாரமுல்லா-பனிஹல் பிரிவில் கடும் பனிப்பொழிவு காரணமாக ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.