காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் கடும் கண்டனம்..!

275

காஷ்மீர் விவாகரத்தை ஜ.நா சபைக்கு சென்று முறையிடுவோம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவுகளை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்ததுடன், ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகளை யூனியன் பிரதேசமாக பிரிப்பதாகவும் தெரிவித்தது. இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க பாகிஸ்தான் நாடாளுமன்றம் அவசரமாக கூடியது. அப்போது காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பிரதமர் இம்ரான்கான் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து பிற்பகலில் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய இம்ரான்கான், இந்தியாவின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா.சபையில் எழுப்புவோம் என்று இம்ரான்கான் உறுதியளித்தார். மேலும் காஷ்மீருக்கான சட்டப்பிரிவு நீக்கியதன் மூலம் மற்றொரு புல்வாமா தாக்குதல் நடக்க வாய்ப்புகள் இருப்பதாகவும், இருநாட்டுக்கும் இடையே போர் ஏற்படும் சூழல் இருப்பதாகவும் இம்ரான்கான் எச்சரித்தார்.

இதனிடையே இந்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், இந்தியாவுக்கான பொறுப்பு தூதரக அதிகாரியை திரும்ப அழைக்க, பாகிஸ்தான் அரசு பரிசீலித்து வருகிறது. இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் ஆகஸ்ட் 16-ம் தேதி பொறுப்பேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.