டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம்..!

137

காஷ்மீர் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நடக்கிறது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததுடன், ஜம்மு-காஷ்மீர், லடாக் பகுதிகளை யூனியன் பிரதேசங்களாக மாற்றுவதாகவும் அறிவித்தது. இதனால் காஷ்மீர் மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவியதால், அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டதுடன் இணையதளம், செல்போன் சேவைகளும் முடக்கப்பட்டன. இதனிடையே காஷ்மீர் சென்ற காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத், கம்யூனிஸ்ட் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகியோர் தடுத்த நிறுத்தப்பட்டனர். பக்ரீத் பண்டிகையையொட்டி முக்கிய இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டதால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க டெல்லியில் பிரதமர் மோடி தலமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது. இதில் காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாக மாற்றுவதற்காக திட்டம், அம்மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.