காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல். இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருவதால், எல்லையில் பதற்றம்.

278

காஷ்மீரில் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள அல்லாபீர் பகுதியில் ராணுவத்துக்கு சொந்தமான 92-வது படைப்பிரிவின் தலைமை அலுவலகம் மீது தீவிரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர். இதற்கு சிறப்பு அதிரடி படையினர் தக்க பதிலடி கொடுத்தனர்.
இருதரப்பினருக்கும் நடைபெற்ற மோதலில், மாநில காவலர் ஒருவர் உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, சிறப்பு அதிரடி படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனையடுத்து, எல்லைப்பகுதி நெடுகிலும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு, கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று காலை முதல் பூஞ்ச் மாவட்டத்தில் பதுங்கியுள்ள பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீண்டும் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதற்கு ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இருதரப்பினரிடையே நடைபெற்று வரும் துப்பாக்கி சண்டை காரணமாக, அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.