ஐ.ஏ.எஸ். அதிகாரியான பைசல் 9-ந்தேதி ராஜினாமா செய்தார் |மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம்

103

காஷ்மீரில் பதவி விலகிய ஐ.ஏ.எஸ். அதிகாரி, வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷா பைசல் என்வர், 2009-ம் ஆண்டில், சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் முதலிடம் பிடித்த முதலாவது காஷ்மீரி என்ற பெருமையை பெற்றவர். கடந்த 9-ந் தேதி, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அவர் சமூக வலைத்தளம் மூலம் அறிவித்தார். காஷ்மீர் மக்கள் கொல்லப்படுவதற்கும், இஸ்லாமியர்கள் ஒடுக்கப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து இம்முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறினார்.இந்நிலையில், ஸ்ரீநகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவதாகவும், ஆனால் எந்த அரசியல் கட்சியிலும் இணையப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.