காஷ்மீரில் ஊடுருவியுள்ள தீவிரவாதிகளை விரட்டும் பணியில் பாதுகாப்புப்படையினர் தீவிரம்…. விடியவிடிய நடைபெற்று வரும் துப்பாக்கிச்சண்டையால் எல்லையில் பதற்றம் அதிகரிப்பு

180

காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே நடைபெற்று வரும் துப்பாக்கிச்சண்டையால் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
காஷ்மீர் மாநிலம் பண்டிபோரா பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக பாதுகாப்புப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சாகுந்த் ஹஜீன் பகுதியில் அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, வீடு ஒன்றில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப்படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப்படையினரும் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த துப்பாக்கிச்சண்டையில் இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. . தீவிரவாதிகளிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள், கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதையடுத்து, தப்பியோடிய தீவிரவாதிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதனால் காஷ்மீர் எல்லையில் பதற்றமான சூழல் காணப்படுகிறது.