காஷ்மீர் மார்க்கெட் பகுதியில் பயங்கர தீ விபத்து… பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

206

காஷ்மீரில் மார்க்கெட் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான கடைகள் எரிந்து நாசமாகின.
காஷ்மீர் மாநிலம் பூஞ் மாவட்டத்தில் உள்ள மார்க்கெட் பகுதியில் ஏராளமான வணிக வளாகங்கள், பலசரக்கு கடைகள் இயங்கி வருகின்றன. இந்தநிலையில் மார்க்கெட் பகுதியில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த பயங்கர தீ விபத்தில் மார்க்கெட் பகுதியில் இருந்த ஏராளமான கடைகள் எரிந்து நாசமாகின. பல லட்சம் மதிப்பிலான சரக்குகளும் இந்த தீ விபத்தில் கருகின.