காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிதியுதவி!

1383
palanisamy

காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு இருபது லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 19ஆம் தேதி, காஷ்மீர் மாநிலம் குரேஸ் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மூர்த்தி, பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த துயரமும், மனவேதனையும் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த ராணுவ வீரர் மூர்த்தியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்த சிப்பாய் மூர்த்தி குடும்பத்திற்கு இருபது லட்ச ரூபாய் உடனடியாக வழங்கவும் முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.