காஷ்மீரில் 20 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்

296

காஷ்மீரில் 20 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்
ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நக்ரோட்டா பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போலீசார் சந்தேகத்தின் பேரில் அந்த வழியாக சென்ற கார் ஒன்றை சோதனையிட்டனர்.அப்போது 15 கிலோ ஹெராயின் போதைப்பொருள் காரில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. காஷ்மீரில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரத்திற்கு கடத்த இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் போதைபொருளின் மதிப்பு 20 கோடி ரூபாய் ஆகும்.