காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 4 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம்..!

238

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 4 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறிய செயலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தின் சம்பா செக்டாரில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில், பாகிஸ்தான் ராணுவத்தினர், இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இரு தரப்புக்கும் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சண்டையில், இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் வீர மரணம் அடைந்தனர். மேலும், 3 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.