காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் 2 இந்திய வீரர்கள் வீரமரணம் ..!

854

காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பணியிலிருந்த வீரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜௌரி மாவட்டம் சுந்தர்பானி எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே இந்திய வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடிக் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதன் காரணமாக எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.