காஷ்மீரில், 3 வெவ்வேறு இடங்களில் தீவிரவாதிகள் அதிரடியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் போலீஸ் அதிகாரி ஒருவர் வீர மரணம் அடைந்தார்..!

671

காஷ்மீரில், 3 வெவ்வேறு இடங்களில் தீவிரவாதிகள் அதிரடியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் போலீஸ் அதிகாரி ஒருவர் வீர மரணம் அடைந்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஷோபியான் மாவட்டத்தில் ராணுவத்தினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது மறைந்திருத்த தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதேபோன்று அனந்த்நாக் பகுதியில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், சிறப்புப் பிரிவு அதிகாரி முக்தாக் அகமது ஷேக் படுகாயமடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி வீர மரணம் அடைந்தார். குல்காம் மாவட்டத்தில், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், ஆசிரியர் ஒருவருக்கு காலில் குண்டு பாய்ந்தது. ஷோபியான், அனந்த்நாக், குல்காம் பகுதிகளில் ராணுவம் மற்றும் பொதுமக்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.