காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது..!

601

காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
காஷ்மீர் மாநிலம் சஞ்சவான் பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நேற்று அதிகாலையில் திடீரென தாக்குதல் நடத்தினர். முகாமின் அருகிலுள்ள ராணுவ குடியிருப்பின் வழியாக நள்ளிரவில் நுழைந்த தீவிரவாதிகள், யாரும் எதிர்பாராத நேரத்தில் நடத்திய இந்த தாக்குதலில் 2 இந்திய வீரர்கள் சம்பவ இடத்திலேயே வீர மரணம் அடைந்தனர். மேலும், இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 3 வீரர்கள் மற்றும் ஒரு பெண் இன்று உயிரிழந்ததைதொடர்ந்து பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இந்திய வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.