காஷ்மீர் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவல் | நவ்ஷேரா பகுதியில் வீரர்களை குறிவைத்து, வெடிகுண்டு வீச்சு

90

காஷ்மீர் எல்லைப் பகுதியில், பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

காஷ்மீர் எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுத்து நிறுத்த பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அத்துமீறி நுழையும் பயங்கரவாதிகளை, இந்திய ராணுவ வீரர்கள் முறியடித்து வருகின்றனர். இந்த நிலையில், காஷ்மீர் மாநிலம் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டியுள்ள நவ்ஷேரா என்ற பகுதியில், ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் சிலர், ராணுவ வீரர்களை குறிவைத்து வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மேஜர் உள்பட 2 வீரர்கள் பலியாகினர். பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.