காஷ்மீர் வன்முறையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த தடையை மீறி பேரணியாக சென்ற பிரிவினைவாத இயக்கத்தலைவர் கிலானி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

276

காஷ்மீர் வன்முறையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த தடையை மீறி பேரணியாக சென்ற பிரிவினைவாத இயக்கத்தலைவர் கிலானி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
காஷ்மீரில் அமைதி திரும்ப எடுத்த நடவடிக்கைகள் பலன் அளித்ததால், படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இந்நிலையில், ஜூலை 9 ஆம் தேதி முதல் நடைபெற்ற கலவரங்களில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஸ்ரீநகரில் உள்ள ஜாமியா மஸ்ஜித் அருகே இரங்கல் கூட்டம் நடத்த பிரிவினைவாத இயக்கங்கள் அழைப்பு விடுத்ததையடுத்து, மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. புல்வாமா, சோபியான், குல்காம் உள்ளிட்ட மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. பேரணி மற்றும் இரங்கல் கூட்டத்தால் மீண்டும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவதை தடுக்கும் வகையில், பிற மாவட்டங்களில் அந்தந்த காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பிரிவினைவாத இயக்கங்களை சேர்ந்த மிர்வாயிஸ் மவுலவி உமர் மவுலவி பரூக் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் , பேரணியில் பங்கேற்க வீட்டுக்காவலில் இருந்து தடையை மீறி வெளியே வந்த கிலானியை போலீஸார் கைது செய்தனர். காஷ்மீரில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதையடுத்து, பாதுகாப்பிற்காக கூடுதல் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அம்மாநிலத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து 21ஆம் நாளாக முடங்கியுள்ளது.