காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி மேலும் ஒரு தமிழக வீரர் பலி… குடும்பத்துக்கு 20 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவு….

240

காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி மேலும் ஒரு தமிழக வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குரேஸ் பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட பனிச்சரிவில் ராணுவ முகாம் முற்றிலும் புதையுண்டது. உள்ளே இருந்த வீரர்கள் உயிருடன் புதைந்தனர். இவர்களில் 10 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அதில் ஒருவர் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் இளவரசன் என்றும் மற்றொருவர் மதுரையைச் சேர்ந்த சுந்தரப்பாண்டி ஆவார்கள். இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு தமிழக வீரர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. அவர் மதுரை மாவட்டம் திருமங்கலத்தையடுத்த கே.வெள்ளாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அவர் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். இதனால், தாமோதர கண்ணனின் உறவினர்களும், நண்பர்களும் சோகத்தில் முழ்கியுள்ளனர். .